மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு | Mahakavi Bharathiyar Biography.

தமிழ் தமிழர் நலன் பெண் விடுதலை தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கதிரவன் தான் நம் தேசிய கவிஞன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். ஒரு கவிஞனாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் நல்ல பத்திரிகையாளர் ஆசிரியராகவும் இருந்தவர்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர்தான். சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர்தான்.

மகாகவி பாரதியார்: 

பெயர் - சுப்பையா என்ற சுப்பிரமணியன்.

பிறப்பு - டிசம்பர் 11 1882.

பிறந்த இடம் - எட்டையபுரம் தமிழ்நாடு.

பிற பெயர்கள் - முண்டாசுக் கவிஞன் சக்திதாசன் பாரதியார் மகாகவி.

இருப்பிடம் - திருவல்லிக்கேணி சென்னை.

பணி - கவிஞர் எழுத்தாளர் விடுதலை போராட்ட வீரர் பத்திரிகை ஆசிரியர்.

பெற்றோர்  - சின்னசாமி ஐயர் லக்ஷ்மி அம்மாள்.

துணைவியார் பெயர் - செல்லம்மாள்.

பிள்ளைகள் - தங்கம்மாள், சகுந்தலா.

முக்கிய படைப்புகள்: 

• கண்ணன் பாட்டு 

• குயில் பாட்டு 

• பாஞ்சாலி சபதம்

பாரதியார் பிறப்பு:

மகாகவி பாரதியார் சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டையபுரத்தில் மகனாகப் பிறந்தார் அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணி.

Mahakavi Bharathiyar


பாரதியார் இளமை பருவம்:

5 வயதிலேயே தன் தாயை இழந்த பாரதியார் ஏழு வயது முதலே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவருக்கு 11 வயது இருக்கும்போது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். எட்டயபுர மன்னர் அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதியார் என்றானது.

திருநெல்வேலியில் உள்ள இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த பாரதியார் அப்போதே தமிழ் அறிஞர்கள் பண்டிதர்கள் ஓடும் சொத்தில் சொந்தமாக ஈடுபட்டார். அதனால் அவரின் தமிழ்ப்புலமை மேலும் அதிகரித்தது அன்றைய திருநெல்வேலி சீமையில் வசித்த பலர் இவரின் புலமையைக் கண்டு வியக்க துவஙகினார்.

பாரதியார் திருமண வாழ்க்கை:

1894 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி பாரதி தன் வாழ்நாளில் மறக்க முடியாத தேதியாக மாறியது 14 வயது மட்டுமே நிறைவடைந்த அவருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாள் ஓடும் நடந்தேறியது. பாலியல் திருமணம் இதுபோன்ற தவறுகள் இனி நடக்கவே கூடாது என்று அவர் அப்போது இனி நான் என்னவோ தெரியவில்லை.

பாரதியார் கற்ற மொழிகள்:

16 வயதில் தன் தந்தையையும் இழந்த பாரதியார் அதன்பிறகு வறுமையில் வாடி தவித்தார். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மொழியையும் இந்தி மொழியையும் கற்றறிந்த இது தவிர ஆங்கிலம் வங்காளம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமை பெற்று விளங்கினார் பாரதியார்.

இத்தனை மொழிகளில் புலமை பட்டதால் தான் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தெளிவாக சொன்னார் மகாகவி பாரதியார்.

பாரதியார் செய்த பணி நான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு தமிழகம் திரும்பினார். பாரதியார் பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

அழகிய தமிழ் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியாரின் எழுத்துக்கள் முதன்முதலில் 1903 ஆண்டு ஆட்சியில் வந்தது அதன் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். பாரதியார் பிறகு சுதேசிய மித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியார் ஆற்றிய பணி: 

தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 2005ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார். மகாகவி பாரதியார் அதன்பிறகு கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் பிள்ளை போன்றோரின் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

அதன் பிறகு கல்கத்தாவில் தாதாபாய் நவுரோஜி தலைமையில் நடைபெற்ற மகா சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அவரிடம் ஆசிபெற்று பாரதியார் அவரை தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார். 1907 ஆம் ஆண்டில் இந்தியா என்னும் வார ஏட்டையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். பாரதியார் இந்திய விடுதலை போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக ஈடுபட துவங்கினார். தாம் ஆசிரியராக இருந்த இந்தியா என்னும் பத்திரிகையை விடுதலைக்காக பயன்படுத்தினார்.

சுதந்திர போராட்டத்தில் பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறு கொள்ள செய்தது.

கத்தியின்றி இரத்தமின்றி 

யுத்தமொன்று வருகுது 

சத்தியத்தின் நித்தியத்தை 

நம்பும் யாரும் சேருவீர்.

                             என்று நெருப்பு கனலாய் கொந்தளித்தார் மகாகவி பாரதியார்.

வறுமையில் பாரதியார்:

கடையத்தில் இருந்த காலகட்டத்தில் பாரதியாரை வறுமை மீண்டும் சூழ்ந்துகொண்டது. தன் நிலையை விளக்கி சீட்டு கவிதை ஒன்றை எட்டயபுர மன்னருக்கு அனுப்பினார். பாரதியார் ஆனால் மன்னரிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை உலகில் எல்லா உயிரினங்களும் பசி இல்லாமல் வாழ வேண்டும். என்ற எண்ணம் பாரதியாரிடம் அந்த வறுமை காலத்திலும் மேலோங்கியிருந்தது வீட்டில் தன் மனைவி சமைக்க வைத்திருக்கும் சிறிதளவு அரிசி கூட காக்கைக்கும் குருவிக்கும் வாரி இறைத்து விட்டு தான் பசியோடு வாழ்ந்த நாட்களில் யாராலும் இத்தகைய குணமுள்ள உணர்வுள்ள ஒருவரால்தான் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று கவி பாட முடியும்.

வறுமையில் கூட தன்மானத்தோடு தான் வாழ்ந்தார் இந்த புரட்சித் தமிழன் பொதுவாக கொடுக்கிற கையை மேலேயும் வாங்க கை கீழே இருக்கும் ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார்.

நம் தேசியகவி ஒருமுறை தன்னுடைய பணக்கார நண்பர் ஒருவர் தட்டில் பணத்தையும் பட்டாடையும் வைத்து பாரதியாரிடம் கொடுத்தாராம். ஆனால் பாரதியோ தட்டை உன்னிடமே வைத்துக் கொள் என்று கூறி தமது கைகளால் அந்த தட்டில் இருந்ததை எடுத்துக் கொண்டாலும் தன்னுடைய கையை எதற்காகவும் தாழ்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார் பாரதியார்.

காந்தி பாரதியார் சந்திப்பு:

வறுமையில் சிலகாலம் வாழ்ந்த பாரதியார் 1919 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார் அப்போது ராஜாஜி  வீட்டிற்கு ஒரு முறை சென்ற போது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார்.

இந்தியாவின் மும்மூர்த்திகளான ராஜாஜி, காந்தி மற்றும் மகாகவி பாரதியார் சந்தித்தது அதுவே முதலும் கடைசியும் ஆகும்.

பாரதியார் இறப்பு:

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார். பாரதியார் அங்கு யாரும் எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது அதனால் தலையிலும் கையிலும் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதோடு அவருக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது அதனால் அவர் நோய்வாய்ப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட போது வயிற்றுக் கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். மருந்துகளை சாப்பிட மறுத்த அவர் தனது 39வது வயதில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

பாரதியார் நினைவுச் சின்னங்கள்

பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் அவருக்கு மணிமண்டபம் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. எட்டையபுரத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த வீட்டினை பாரதியார் நினைவு இல்லமாக மாற்றி அதை இன்று வரை தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது.

பாரதியார் எழுதிய நூல்கள்:

1.பாஞ்சாலி சபதம் 

2.பாரதி அறுபத்தாறு 

3.தேசிய கீதங்கள் 

4.விநாயகர் நான்மணிமாலை

5.கண்ணன் பாட்டு 

6.குயில் பாட்டு 

7.தோத்திர பாடல்கள் 

8.ஞானப் பாடல்கள் 

9.புதிய ஆத்திச்சூடி 

10.பதஞ்சலி யோக சூத்திரம் 

11.பத்திரிகையின் கதை 

12.விடுதலைப் பாடல்கள்

13.சின்னஞ்சிறு கிளியே

14.பொன் வால் நரி

15.பாரதியார் பகவத் கீதை

16.ஞானரதம் 

17.நவதந்திரக் கதைகள்

18.ஆறில் ஒரு பங்கு.