பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை அடக்கம் செலுத்தி கொண்டு இருந்தது பிரிட்டன். அதனிடம் அடிபணியாமல் தனக்கென தனி ராஜ்யம் அமைந்திருந்தன. இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் இந்த இரு நாடுகளுக்கு நடுவே எடுக்கிற தூரிதல் இருந்த குட்டி தீவு நாடு தான் கோர்சிகா. எந்தவித வளர்ச்சியும் இல்லாத கோர்சிகா, இத்தாலியின் ஆளுகைக்கு உட்பட்டு தனது சுதந்திரத்துக்காக போராடிக்கொண்டு இருந்தது. புரட்சியும், வறுமையுமாக மக்களின் வாழ்க்கை எதிர்பார்ப்புடன் சென்று கொண்டு இருந்தது.
கோர்சிகா மக்கள் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்று எண்ணிருந்த ஒரு புரட்சி படையை வயோனி என்பவர் நடத்தி கொண்டு இருந்தார். அவருக்கு உதவியாக அடுத்த இடத்தில இருந்து ஆலோசனை வாங்கிக்கொண்டு இருந்தார் கார்லோ, அவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரது மனைவி லெட்டீசியா. இந்த தம்பதிக்கு பிறந்த 13 குழந்தைகளில் ஒருவர் தான் நெப்போலியன். 1768 ஆம் ஆண்டு இத்தாலியர்கள் கோர்சிகாவை விட்டு வெளியேறிய தருணத்தில் போகிறபோக்கில் பிரான்சிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்கள். கோர்சிகாவை கைப்பற்றிய பிரான்ஸ் நூதன வழிமுறைகளைக் கையாண்டது.
கோர்சிகா போராளிகளுக்கு பொது மன்னிப்பு, ராஜபோக வாழ்க்கை அதையும் மீறினால் சிறை – எது வசதியானது என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. பலரும் பிரான்ஸின் மாயவித்தைக்கு கட்டுப்பட்டார்கள். அவர்களில் ஒருவராக பிரான்சுக்கு கட்டுப்பட்டார் நெப்போலியனின் தந்தை கார்லோ அவருக்கு அப்போது வேறு வழியும் தெரிந்திருக்க வில்லை ஆகையால் பெரும்பான்மையானவர்களின் முடிவை அவரும் எடுத்தார். அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் பிரான்ஸ் அரசாங்கம் செய்து தந்தது. அவரது பிள்ளைகளுக்கு பிரான்சின் உயர்பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பு வேறென்ன வேண்டும் பிரான்ஸ் அரசின் சலுகையுடன் பிரியண்ணாவில் பள்ளிக் கல்வியை பயின்ற நெப்போலியன்.
பிரான்சின் உள்ள ராணுவப் பள்ளியில் மேற்கல்வியைத் தொடர்ந்தார். நெப்போலியன் கோர்சிகாவை சேர்ந்தவனாக இருந்ததால் ஆதிக்க மனப்பான்மை நிறைந்த பிரெஞ்சு மாணவர்கள் நெப்போலியனை ஏளனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நடை உடை பாவனை என அனைத்திலும் கிண்டல் தான். அழுது தீர்த்தான் அந்த பத்து வயது சிறுவனான நெப்போலியன். ஒரு கட்டத்தில் சக மாணவர்கள் மீது வெறுப்பு ஏற்பட புத்தகங்கள் மட்டுமே அவருக்கு நண்பர்களாக இருந்தன. தனிமையை போக்க புத்தகங்களை படிக்க ஆரம்பித்தவன் தனக்கு கிடைத்த எல்லா புத்தகத்தையும் படித்தான். அப்படி ஆரம்பித்த அவரது புத்தக வாசிப்பு நில உரிமை குறித்தும் சுதந்திரத்தின் அவசியம் குறித்தும் இன்ன பிற விஷயங்கள் குறித்தும் அவனுக்கு போதித்தன.
இதன் காரணமாக கோர்சிகா பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், தான் பிரான்ஸ் உதவியுடன் கல்வி கற்பதையும் நினைக்க நினைக்க நெப்போலியனுக்கு அவமானமாக இருந்தது ஆனால் நெப்போலியன் நினைப்பது போன்று பிரான்ஸ் ஒன்றும் அத்தனை ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் நிறைந்த நாடு அல்ல. அதனை வழிநடத்திய லூயிமன்னர்களால் அந்த நாட்டு மக்களால் அல்லலுற்றனர். லூயிமன்னர்களால் மக்கள் மூன்றாம் தரமாக நடத்தப்பட்டனர், பிரான்சில் 90 சதவிகித மக்களை வெறும் 10 சதவிகித உயர் வர்க்கத்தினர் ஆளுமை செலுத்தி கொண்டிருந்தனர்.
பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தனர். அப்படி பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக போராட்டம் வெடித்த போது பிரான்ஸ் அரசு பதறி போய்விட்டது. கிட்டத்தட்ட இதே தருணத்தில் தான் ராணுவப் பள்ளியில் கல்வியை முடித்து விட்டு தனது சொந்த நாடான கோர்சிகாவிற்கு எதிரான பிரெஞ்சு படைப் பிரிவில் பணிக்கு சேர்ந்தார் நெப்போலியன். உடையளவில் பிரெஞ்சு ராணுவ வீரரான நெப்போலியன் மனதளவில் கோர்சிகா விடுதலை பெறுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.
மாபெரும் பிரெஞ்சு சாம்ராஜ்யத்திடம் பெற்ற இராணுவப் பயிற்சியை வைத்து கோர்சிகாவில் இருந்து பிரெஞ்சு படையை வெளியேற்ற திட்டமிட்டான் அந்த இளைஞன். உடல்நிலை சரியில்லை என விடுமுறை எடுத்து அவ்வப்போது கோர்சிகா சென்று விடுதலை பெறுவதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தான். மறைமுகமாக நெப்போலியன் தலைமையேற்று பிரெஞ்சு படைக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் பிரெஞ்சுப் படையினர் உடைத்து தவிடுபொடியாக்கினார். பிரான்ஸ் மீது தாக்குதல்களை நடத்துவது நெப்போலியன் என்பதை அறிந்த பிரான்ஸ் அரசு அவரை ராணுவத்திலிருந்து பதவி நீக்கம் செய்தது.
இதே காலகட்டத்தில்தான் லூயி மன்னருக்கு எதிரான பிரெஞ்சு புரட்சியும் நடந்து கொண்டிருந்தது. வீதி வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிந்த ஆளும் வர்க்கம் வேறு வழியின்றி மன்னர் பதினாறாம் மன்னார் லூயியை கைது செய்து மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டது.
இதனைத் தொடர்ந்து புதிய அரசு பதவி ஏற்றது. புதிய அரசு ஜனநாயக வழியில் செயல்படும் என நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு உயர் வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் செயல்பட ஆரம்பித்தது புதிய அரசு. இந்த சூழலில்தான் கோர்சிகாவை விட்டு பிரான்சில் குடியேறினார் நெப்போலியன். பிரான்சில் லுயிராசு கவிழ்க்கப்பட்டிருந்தனால் நெப்போலியனுக்கு மீண்டும் ராணுவத்தில் வேலை கிடைத்தது ஒரு சராசரி இளைஞன் தன் குடும்பத்தை வைத்துக்கொண்டு என்ன அவஸ்தைகளை அனுபவிப்பானோ அதனையெல்லாம் நெப்போலியனும் அனுபவித்தான் அவை எல்லாம் அடுத்த சில ஆண்டுகளில் மாற்றம் கண்டன அதற்கான தருணம் வெகு விரைவில் அமைந்தது.
பிரான்சில் மீண்டும் லூயி மன்னரின் ஆட்சி மீண்டும் மலர ஆதரவு தெரிவித்து ஆங்காங்கே சில குழுக்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.அவர்களை கட்டுப்படுத்தும் பணியில் நெப்போலியன் ஈடுபடுத்தப்பட்டான். அப்போதுதான் உளான் துறைமுகத்தை கைப்பற்றிய பிரிட்டன் படை மீது நெப்போலியன் தலைமையிலான படை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. ராணுவத் தளபதிகளே ஆச்சரியப்படும் அளவுக்கு பிரிட்டன் படைகளை பின்னோக்கி ஓட வைத்தது. இந்த போரில் நெப்போலியனின் வீரத்தை கண்ட கொண்ட ராணுவ அதிகாரிகள் 1893 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ராணுவத்தில் பிரிகேடியர் ஜெனரல் பதவி கொடுத்தது அழகு பார்த்தது.
நம்மூர் கடாரம் கொண்டான் போன்று நெப்போலியனை உளான்கொண்டான் என்று புகழ்ந்தனர் மக்கள். ஆனால் அது நெடுநாள் நீடிக்க வில்லை அரசுக்கு எதிராக செயல்பட்டதாக பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நெப்போலியன் விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். எனினும் பதவி இறக்கம் செய்யப்பட்ட தான் ராணுவத்தால் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். தனக்கென்று ஒரு தருணம் வரும் என காத்திருந்த அவருக்கு அந்த தருணம் 1796 இல் ஆஸ்திரிய சாடினிய படைப்பிரிவுகள் இத்தாலி ஆக்கிரமிப்புகள் வழியாக வந்து சேர்ந்தது இதனை அறிந்த பிரெஞ்சு நிர்வாகம் ஆஸ்திரிய சாடினிய படையை விரட்டுவதற்கு சரியான ஆளை தேடிக்கொண்டிருந்தது.
யாருடைய தலைமையில் படையை திரட்டலாம் என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த தருணத்தில் பிரெஞ்சு நிர்வாகத்திற்கு மீண்டும் நினைவுக்கு வந்தது நெப்போலியன் என்ற பெயர். இப்போது நெப்போலியனை தேடித் பிரெஞ்சு நிர்வாகமே வந்து நின்றது. இப்பொது நெப்போலியனின் வியூகத்தை கேட்டு பிரெஞ்சு நிர்வாகம் அசந்து போனது. போரில் ஆஸ்திரிய சாடினிய படைகளைத் ஓட ஓட விரட்டியது நெப்போலியனின் தலைமையிலான படை .ஆஸ்திரியாவிற்கு எதிராக படையெடுத்து அதன் தலைநகர் வியன்னாவில் பிரான்சில் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தார் நெப்போலியன். பிரான்சின் சார்பாக போர் முடிவுகளை எடுக்கும் முக்கிய அதிகாரம் அவர் கைக்கு வந்தது.
உளான் துறைமுகம் தாக்குதலின்போதே நெப்போலியன் என்ற பெயர் மக்களிடையே அடிபட ஆரம்பித்தது ஆஸ்திரிய சாடினிய படையை அடித்து நொறுக்கிய போது நெப்போலியன் பிரான்சின் மாவீரனாக உருவெடுத்தார், வீரம், ராஜதந்திரம், புதிய போர்முறை இவற்றால் சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடினார் நெப்போலியன். நெப்போலியனின் பார்வை பிரிட்டன் பக்கம் திரும்பியது கீழ் நாடுகளுடன் பிரிட்டன் கொண்டிருந்த வியாபார தொடர்புகளை துண்டிக்கும் நோக்குடன் எகிப்து மீது படையை ஏவினான்.
எகிப்தின் சூயஸ் கால்வாய் பகுதிதான் மத்திய கிழக்கு நாடுகளின் நுழைவாயிலாகத் திகழ்ந்தது அதை அடைந்து விட்டால் பிரிட்டனின் சாம்ராஜ்யத்திற்கு செக் வாய்த்த மாதிரி இருக்கும். இந்தியாவுடன் வர்த்தக தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது நெப்போலியனின் திட்டம். இதன் தொடர்ச்சியாக அலெக்சாண்டிரியாவை வீழ்த்தினார். ஆனால் 1898இல் நயில் நதிக்கரையில் நடந்த போரில் பிரிட்டிஷ் கடற்படையால் நெப்போலியன் படைகள் தோற்கடிக்கப்பட்டன ஆதலால் கிழக்கு நாடுகளை பிடிக்க நெப்போலியன் செய்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்த தோல்வியிலிருந்து தப்பிக்க ஓட்டமான் துருக்கியர் வசமிருந்த சிரியா கலிலியோ பகுதியில் போரை நடத்தினார் நடத்தும் தொடர் தோல்விகளால் துவண்ட நெப்போலியன் பிரான்சின் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டதை அறிந்த நாடு திரும்பினான் அதே சமயத்தில் உள்நாட்டு குழப்பங்களால் பிரான்ஸின் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த நெப்போலியன் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தனக்கு வேண்டப்பட்டவர் மூலமாக அதிரடியாக ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றிய நெப்போலியன் புதிய ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினார் அதன்படி கான்செல் என்ற பட்டத்துடன் பல அதிகாரங்கள் நெப்போலியன் கைக்கு வந்து சேர்ந்தன.
ஆலோசனை குழுக்களும் சட்டசபை அமைப்பும் அமைக்கப்பட்ட போதிலும் உண்மையான அதிகாரம் நெப்போலியனிடம் தான் இருந்தன. பிரெஞ்சு புரட்சியினால் ஏற்கனவே சோர்ந்து போயிருந்த மக்களுக்கு நெப்போலியனின் தலைமை நம்பிக்கையாக இருந்தது.
அந்த ஆதரவுடன் 1804 ஆம் ஆண்டு தனது முப்பத்திஐந்தாவது வயதில் பிரெஞ்சு சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார் நெப்போலியன். நடைமுறையில் நெப்போலியன் பிரான்சின் சர்வாதிகாரியாக செயல்பட்டார். இது ஒருபுறமிருக்க பேரரசின் சக்கரவர்த்தியாக அரியணை ஏறியது முதல் 1815 ஆம் ஆண்டு வரை ஐரோப்பாவின் சரித்திரத்தை மாற்றி எழுத முற்பட்டார் மன்னராட்சிக்கு எதிராக பெரும் புரட்சி செய்து ஆட்சியை குடியரசு ஆட்சியை கொண்டு வந்தவர் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. எனினும் அவரது தலைமையில் ஆட்சி நிர்வாகத்தில் அதிரடியாக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன தொடர்ந்து பல்வேறு போர்களில் வென்ற நெப்போலியன் ஒரு கட்டத்தில் போர்ச்சுகள், பிரிட்டன், ஸ்காண்டிநேவியா நீங்கலாக மொத்த ஐரோப்பாவையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார் ரஷ்ய மன்னர் ஜார்ஜ் அலெக்சாண்டர் உடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி ஐரோப்பாவை இரு பகுதிகளாக பிரித்ததாக கூறப்படுகிறது.
தான் வென்ற நாடுகள் முழுவதிலும் தனது அண்ணன் தம்பிகள் நண்பர்களை ஆட்சியாளர்களாக நியமித்துக் கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்பெயின், போர்ச்சுகள் ஆகிய நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர நெப்போலியன் செய்த முயற்சிகள் நெப்போலியனுக்கு எதிர்ப்பையே உண்டாக்கின. ஸ்பெயின் நாட்டின் சில பகுதிகளில் நெப்போலியன் படைகள் தோற்றன. என்ன இருந்தாலும் பிரிட்டனை ஒரு கை பார்க்க வேண்டும் என்பதே நெப்போலியனின் நோக்கமாக இருந்தது நெப்போலியனின் நோக்கத்தை அறிந்து கொண்ட பிரிட்டன் அவருக்கு குழி பறிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியது.
நெப்போலியனின் கட்டுபாட்டுக்குள் வர மறுத்த பிரிட்டனால் “கான்டினென்டல் சிஸ்டம்’ என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடுகள் பிரிட்டனுடன் எந்த வர்த்தகமும் புரியக்கூடாது ஆனால் நெப்போலியன் எதிர்பார்த்த மாதிரி இந்த நடவடிக்கை வெற்றிபெறவில்லை ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி பிரிட்டனுடன் வர்த்தகம் புரிந்ததால் சினம்கொண்ட நெப்போலியன் 6 லட்சம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தான் நெப்போலியனின்படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவில் எடுத்து மாஸ்கோ வெறிச்சோடி இருந்தது சுமார் இரண்டரை லட்சம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருந்தனர்.
ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரண் அடைவான் என்று அங்கேயே முகாமிட்டு இருந்தார் நெப்போலியின். ஆனால் ஷா மன்னன் வருவதற்கு பதில் பனிக்காலமும் கடும் குளிரும் தான் வந்தன. இது குறித்து தாக்குதல் குறித்து யோசிப்பதற்கு முன்பே பசியாலும், குளிரிலும் பல்லாயிரம் பிரெஞ்சு படைவீரர்கள் தங்கள் உயிரை இழந்தனர். வேறு வழியின்றிப் எஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளையிட்டான் நெப்போலியின். 6 லட்சம் வீரர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயிரம் வீரர்களுடன் திரும்பினார். இந்த பெரும் தோல்வி நெப்போலியனின் ஆட்சியை ஆட்டம் காண செய்தது. இந்த தருணத்தை பயன்படுத்தி தாக்குதலை தொடங்கின பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகள் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் பெரும் தோல்வியைச் சந்தித்தார் நெப்போலியன்.
இதனை அடுத்து எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான் நெப்போலியன். ஆனால் சில நாட்களில் அங்கிருந்து தப்பி வந்து மறுபடியும் படைகளை திரட்டி போருக்கு தயாரானார். சில மாதங்கள் தனிமையில் வாழ்ந்தவர் பிரான்ஸ் மக்களின் ஆதரவோடு மீண்டும் மன்னனாக முடி சூட்டப்பட்டார். மக்களின் ஆதரவும் மனைவிகளின் ஆதரவும் அவருக்கு இருந்தது. அதனால் உற்சாகத்துடன் புதிய படையை உருவாக்கினார். இதனை தொடர்ந்து 1815 நடந்த இந்த யுத்தமே நெப்போலியனின் இறுதி யுத்தமாக அமைந்தது. வழக்கம் போல ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு அணி, நெப்போலியன் தனி அணி என கடுமையான யுத்தம் தொடங்கியது இரு பக்கமும் அனல் பறந்தது.
நெப்போலியனின் துணைத் தளபதிகள் படைகளுடன் வந்து சேர்ந்த காலதாமதம் காரணமாக நெப்போலியன் படை தோல்வியடைந்தது. ஐரோப்பிய நாடுகளை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்கிற பேராசையே அவருடைய வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தது இதற்கு பின்னணியில் நெப்போலியனின் மனைவி இருந்ததாகவும் பின்னாளில் தகவல் வெளியானது. நெப்போலின் பதவி விலகினால் தான் பிரிட்டிஷ் அரசின் கோபத்தை தணிக்க முடியும் என கருத்து முன்வைக்கப்பட்டது. அதனையடுத்து பதவி விலகிய நெப்போலியன் நாட்டைவிட்டு வெளியேறி கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த போது துறைமுகத்தில் வைத்து பிரிட்டன் படையினர் கைது செய்தனர். இந்த முறை ஐரோப்பாவில் இருந்து பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெலினா தீவில் சிறை வைத்தனர்.
தனது இறுதி காலம் வரை அந்த தீவிலேயே தனிமை வாழ்கை வாழ்ந்தார். வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1821 ஆம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். அந்த தீவிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 1840 ல் அவரது எலும்புகள் பிரான்ஸ் கொண்டுவரப்பட்டு நினைவு மண்டபம் அமைத்தனர். தனது கடைசி காலத்தில் தனித்தீவில் சாவார் என நோஸ்ட்ராடாமஸ் கூறியது அப்படியே பலித்தது என கூறுகின்றனர்.
நெப்போலியனின் வாழ்க்கையில் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. அவர் சிறு வயதாக இருக்கும்போது தின்பண்டங்கள் விற்கும் பெண்மணி ஒருவர் நீ பெரிய ஆள் ஆகி என்னவாக ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம் அதற்கு நெப்போலின் “நான் பிரான்ஸ் நாட்டின் சக்ரவர்த்தி ஆவேன்” என்று கூறினாராம். அவர் பிரான்ஸ் சக்ரவர்த்தி ஆனதும் தனது தள்ளாத வயதில் அவரை தேடி சென்று இதனை கூறினார். இதனை கேட்டு மிகுந்த ஆச்சிரியம் அடைந்தார் நெப்போலின்.
அவரது வாழ்க்கையில் சர்ச்சை சம்பவங்களுக்கும் குறைவில்லை. பதவியேற்பு விழாவிற்கு அப்போதைய போப் ஆண்டவர் அழைக்கப்பட்டு இருந்தார். அவரது கையால் மகுடம் சூட காத்திருந்த நெப்போலின், போப் ஆண்டவர் தமக்கு எதிராக யோசித்து மகுடம் சூடாமல் போனால் என்னாவது என்று யோசித்து அவரது கைகளில் இருந்து மகுடத்தை பறித்து தானே சூட்டிக்கொண்ட சம்பவமும் அரங்கேறியது.
சாதாரண சிப்பாயாக இருந்து படிப்படியாக முன்னேறி பெரும் வியத்தகு யுத்தங்களை புரிந்து மன்னராகி மொத்த ஐரோப்பாவையும் அலற வைத்து சர்வசக்தி மிக்க போப்பாண்டவரையே நிற்க வைத்து கேள்வி கேட்டு மிக எளிய மனிதனாய் வாழ்ந்து வரலாற்றில் மிகப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி விட்டுச் சென்ற நெப்போலியனின் பாதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. போப்பாண்டவரை படுத்திய பாட்டின் சாபம் என்றும் சொல்லுவார்கள், நெப்போலின்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தது, தன ஜோசியரின் கணிப்பை மீறி ரஷ்யாவிற்கு படையெடுத்ததே கரணம் என்று கூறுபவர்களும் உள்ளனர். நெப்போலியன் ஆட்சிக்கு வந்த பிறகு பிரான்சில் அமைதி நிலவியது. பொருளாதாரம், அரசியல், சட்ட திருத்தங்களை சீர்திருத்தினர்.
பிரான்ஸின் ஆற்றுக்கு மேல் பாலங்களை காட்டினார். வீதிகளை திருத்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார், வேலைவாய்ப்புகளை பெருக்கினார்,வரி வசூலிப்பதில் மாற்றங்களை கொண்டு வந்தார். பிரான்சில் இன்பிரியல் பேங்க் ஒன்றை உருவாக்கினார்.நாட்டு நிர்வாகத்தில் நெப்போலியனின் பங்களிப்பு அவர் வகுத்து தந்த “சிவில் கோடு” என்ற புதிய சட்டங்கள் “கோடு ஆப் நெப்போலின்” என்று அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களினால் கிடைக்காத பெருமையை அந்த சட்டங்களினால் அவருக்கு கிடைத்தது. சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அந்த சாராம்சம் அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்றன.
நூல்கள் வாசிப்பதில்அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் தான் உறங்குவாராம். அப்படி அவர் சிரமப்பட்டு படித்து சேர்த்து அறிவுச் செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச்சிறப்பாக நிர்வகித்த மன்னனாக உயர்த்தியது. வெற்றி என்பது முயற்சியில் பத்தி நம்பிக்கையில் மீதி இதுதான் நெப்போலியன் என்ற மாவீரனின் தாரக மந்திரமாக இருந்தது அந்த மந்திரம் தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழை கூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.