தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று கேட்பவர்களே வாயை பிளக்கும் அளவுக்கு தமிழன் கண்டறிந்த சில விசயங்களை கண்டு இன்று உலகமே வியக்கின்றது. தமிழர்களாகிய நாம் நம் முன்னோர்களின் சிறப்புகளை அறியாமல் இருக்கிறோம். அதுமட்டுமல்லாது அவர்களின் பெருமை அறிந்திருந்தாலும் அதுபற்றி வெளியில் அதிகம் பேசுவதில்லை.
கல்லணை:
உலகின் முன்னோடி அணை என்று அழைக்கப்படும் பெருமை வாய்ந்தது கல்லணை. இது கட்டப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் முடியபோகின்றன. இன்றும் நொடிக்கு இரண்டு இலக்க கனஅடி நீர் செல்ல ஏதுவாக பலமாக இருக்கிறது கல்லணை. கரைபுரண்டோடும் காவிரியை தடுத்து வைக்கும் பலமான கல்லணையை கட்டிய கரிகாலன் 2000 ஆண்டுகளுக்கு முன் எத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பான்.
தொல்காப்பியமும் திருக்குறளும்:
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே உலகில் உள்ள நூல்களுக்கு இலக்கண முன்னோடியாக விளங்குகிறது. தமிழின் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட திருக்குறள் உலகின் 26 மொழிகளில் இயற்றப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில்:
கற்களே அரிதான காவிரி ஆற்றங்கரைகளில் 66 மீ உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெரிய கோயிலை ராஜராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது இன்றளவும் வியப்பாக உள்ளது.
கோயிலின் கடைக்கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட கல்லை கோயிலின் உச்சியில் எவ்வாறு நிறுவியிருக்க முடியும். கற்களின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதன் அடிப்படையிலேயே சிற்பிகள் அந்த கல்லை கோயிலின் மேல் அமைத்துள்ளனர் கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிற கற்களால் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இது இந்திய வழித்தோன்றலின் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்பங்களை இன்றளவும் ஆங்கில வழியில் கற்றவர்களால் கண்டறியமுடியவில்லையே ஏன்?
மாமல்லபுரம் கடற்கரை கோயில்:
கடல் சீற்றங்களுக்கு இடையே கடற்கரையிலேயே 1400 ஆண்டுகளுக்கு முன், பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாக செதுக்கி, அதன்பின் உள்நோக்கி குடைந்து கோயிலை உருவாக்கியுள்ளான் தமிழன்.
மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. இந்தியாவின் உலக கலாச்சாரத்தின் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
அங்கோட்வாட் கோயில்:
இது இந்தியாவில் இல்லாத காரணத்தினால் இதற்கான சுற்றுலா வழித்தடங்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை. என்றாலும் தமிழனின் பெருமையை அறியச் செய்ய இந்த கோயில் இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கோயில்:
இரண்டாம் சூரிய வர்மன் எனும் தமிழ் மன்னன் கட்டிய இந்த கோயில் உலகின் மிகப்பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது.
கம்போடியாவை கைப்பற்றிய போது
சூரியவர்மன் கம்போடியாவை கைப்பற்றி அங்கு இந்த கோயிலை கட்டியுள்ளான். இதன் சுற்றுசுவர் நான்கு பக்கமும் 3.6 கிமீ நீளம் கொண்டவை என்றால் எவ்வளவு பெரிய கோயில் என்று நீங்களே யோசித்து பாருங்களேன்
திருநள்ளாறு கோயில்:
வானில் சுற்றும் செயற்கை கோள்கள் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் அருகே வரும்போதுமட்டும் சில நொடிகள் நின்று செல்கிறதாம். அந்த இடம் எது என்று பார்த்தால் அதுதான் திருநள்ளாறு சனீஸ்வரன்கோயில். இது ஆன்மீகம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பதிலாக அறிவியல் ரீதியில் பதில் தரப்பட்டது. அதாவது, வானில் மிதக்கும் செயற்கைக் கோள்களுக்கு அருகே கருநீல கதிர்கள் வரும்போது அது நின்று விடுகிறது என்கிறார்கள்.
ஆன்மீகத்தில் சனிப்பெயர்ச்சி என்று அழைக்கப்பட்டாலும் இது கருநீல கதிர்களின் அளவற்ற பிரதிபலிப்பை குறிப்பதற்காகவே முன்னோர்களால் இந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடல் நடுவே ராமேஸ்வரத்தில் அதிசயம்:
கடல் நடுவே அமைந்துள்ள ராமேஸ்வரம் கோயிலில் இருக்கும் அதிசயங்களை இன்றளவும் விஞ்ஞானிகள் குழம்பி வருகின்றனர். கடலுக்கு நடுவே இருக்கும் இந்த இடத்தில் மலைகளோ பாறைகளோ இல்லை. அப்படியிருக்கு கடல்கடந்து எப்படி பாறைகளை கொண்டு வந்திருப்பர் தமிழர்கள்.
பழமை:
இராமேஸ்வரம் கோயில் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையானது. 1212 அடி மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம், 135 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய நடை மண்டபம் இங்குள்ளது