தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் யாவை | Best Tourist Places In Tamil Nadu

திருவள்ளூர் மாவட்டம்:

திருவள்ளூர், தெற்கு மாநிலமான தமிழ்நாட்டில் வேகமாக வளரும் மாவட்டம். இது சென்னை நகருக்கு அருகில் உள்ளது, இம் மாவட்டம், தொழில்துறை மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகள், வணிக நிறுவனங்கள், மத நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவை தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துகின்றன.


1. ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில், திருவள்ளுர்

2. ஸ்ரீ வீரராகவஸ்வாமி திருக்கோயில், திருவள்ளூர்

3. வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்

4. பவானி அம்மன் திருக்கோயில், பெரியபாளையம்

5. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி

6. தேவி கருமாரி அம்மன் திருக்கோயில், திருவேற்காடு

7. பழவேற்காடு

8. பூண்டி ( திருவள்ளூர் தாலுகா )



சென்னை மாவட்டம்:

சென்னை பெருநகரம், முற்காலத்தில் மதராசு பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. மதராசபட்டினம் என்று அழைக்கப்படும் பழைய பகுதி இதன் வடக்கே அமைந்துள்ளது. பின்னர், இதன் இடைப்பட்ட வடக்குப் பகுதிகளில் விரைவாக புதிய குடியேற்றங்கள் மற்றும் வீடுகள் உருவாக்கப்பட்டு மேற்படி இரு நகரங்களும் கிட்டத்தட்ட ஒரே நகரமாக மாறியது. குடியேற்றத்தின் அதிகாரப்பூர்வ மையமாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நியமிக்கப்பட்ட போதிலும், ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் பட்டினம் என்ற பெயரையே ஒருங்கிணைந்த நகரத்திற்கு பயன்படுத்தினர்.


1. மெரினா கடற்கரையில் மீன் அருங்காட்சியகம்

2. ஐஸ் ஹவுஸ்

3. செப்பாக் அரண்மனை,

4. செனட் ஹவுஸ்,

5. பி.டபிள்யூ.டி அலுவலகம்,

6. பிரசிடென்சி கல்லூரி, மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள வரலாற்று கட்டிடங்கள்.


காஞ்சிபுரம் மாவட்டம்:

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும். சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளது. பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்ற மாவட்டம். தமிழ் நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் அமைந்துள்ளது. இது சென்னை மாநகரருக்கு அருகே உள்ளது.

• கைலாசநாதர் கோயில்

• மாமல்லபுரம் (மஹாபலிபுரம்)

• காஞ்சி மடம்

• திருவிடந்தை
சகுந்தலா ஜகந்நாதன் 

• அருங்காட்சியகம் (நாட்டுப்புற கலைகள்)

• சீனிவாச பெருமாள் கோயில் (செம்மஞ்சேரி)

• முதலை வங்கி

• அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா (வண்டலூர்)

• கோவளம்

• முட்டுக்காடு படகு துறை

வேலூர் மாவட்டம்:

வேலூர் மாவட்டமானது பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாப்கள், பிஜப்பூர் சுல்தான் போன்ற அரசர்களால் ஆட்சி செய்யப்பெற்ற பெருமைமிக்க பாரம்பரியம் கொண்டது. 17-ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரில் இதன் சிறப்பம்சம் மற்றும் கோட்டையின் வலிமையும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. கி.பி., 1806-ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் ஒரு ஐரோப்பிய சிப்பாய் படுகொலையைச் சாட்சியாகக் கொண்டுள்ளது.

• சமணச் சிற்பங்கள், கல்வெட்டுகள் வள்ளிமலை

• சுப்ரமண்யஸ்வாமி கோயில் வள்ளிமலை

• ரங்கநாதர் ஆலயம் எருக்கம்பட்டு

• டெல்லி நுழைவு வாயில் ஆற்காடு

• குடைவரை, சமண தீர்த்தங்கரர் சிற்பம் விளாப்பாக்கம்

• சோளிங்கர் குளக்கரையில் காணப்படும் கல்வெட்டு சோளிங்கர்

• ஒற்றை பாறையில் அமைந்த குடைவரை மகேந்திரவாடி


திருவண்ணாமலை மாவட்டம்:

தமிழ்நாட்டில் மிக அதிக பக்தர்கள் வருகைதரும கோயில்களில் திருவண்ணாமலையும் ஒன்று. பண்டைய காலத்தில் அண்ணாமலை என்பது அடையமுடியாத மலை என்று பொருள்கொள்ளத்தக்கதாய் இருந்தது. பின்பு இம்மலையின் புனிதத்தன்மையினால் இப்பெயருடன் “திரு” என்ற அடை மொழி முன்னொட்டாக சேர்த்து திருவண்ணாமலை என்று வழங்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய மற்றும் பாரம்பரியமான ஆன்மீகத் சைவத்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. அண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது. கட்டக்கலையிலும், பெருவிழாக்களினாலும் திருவண்ணாமலை கோயில் மிகப் புகழ்பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் தீபத்திருவிழா தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

சுற்றுலாத் தலங்கள்:

1. சாத்தனூர் அணை

2. பர்வதமலை

3. ஜவ்வாதுமலை

கிருஷ்ணகிரி மாவட்டம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30 வது மாவட்டமாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து உருவானது. இந்த மாவட்டம் பசுமையான பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் குன்றுகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

‘கிருஷ்ணா’ என்பது ‘கறுப்பு’ என்றும் “கிரி” என்பது ‘மலை’ என்றும் குறிக்கிறது. கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் இந்த மாவட்டம் கிருஷ்ணகிரி என வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ண தேவா ராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்தது, எனவே இந்த மன்னர் பெயரிடப்பட்டிருக்கலாம்.

சுற்றுலா தளங்கள்:

1. கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா

2. அவதானப்பட்டி ஏரி பூங்கா

3. கெளவரப்பள்ளி அணை

4. சந்திர சூடேஸ்வரர் கோவில்

5. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம்

6. அய்யூர் சுற்று சூழல் பூங்கா

7. தளி ஏரி மற்றும் பூங்கா

தருமபுரி மாவட்டம்:

சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியை ஆட்சி புரிந்தவர்களில் அதியமான் நெடுமானஞ்சி மிகவும் முக்கியமானராவார். தமிழ் பெண் புலவரான ஔவையாரை ஆதரித்தார். 8-ம் நூற்றாண்டில் சேலம் மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் பல்லவர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது என அறியப்படுகிறது.அதே நேரத்தில் சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் கங்கா பல்லவர்களின் கீழ் இருந்தது.8-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கங்கா பல்லவர்கள் பாரமஹால் பகுதியை ஆட்சி செய்தனர்.

தற்போதைய தருமபுரி மாவட்டம் ஆங்கிலேய ஆட்சியின்போது சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுக்காவாக இருந்தது. 2.10.1965-ஆண்டு தருமபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

சுற்றுலா தளங்கள்:

• ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி

• தீர்த்தமலை கோவில்

சேலம் மாவட்டம்: 

மலைகள், குன்றுகள் மற்றும் பல்வகை நிலபகுதிகளால் சூழப்பட்ட சேலம் மாவட்டம் ஒரு நிலவியல் சொர்கமாக திகழ்கிறது. கஞ்சமலை பகுதியில் கிடைக்கும் இரும்பு தாது சேலம் இரும்பாலை திட்டத்திற்கு வழிவகுத்தது. தற்போது சேலம் இரும்பாலை மூலம் பெரிய வார்ப்பிரும்பு பாளங்களிருந்து தேவையான வடிவங்களில் இரும்பு தகடுகள் தயாரிக்கப்படுகிறது. சேலத்து மாம்பழங்களின் இனிப்பு எல்லோராலும் மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக மல்கோவா மாம்பழங்கள் சேலத்தின் பெருமை எனப்போற்றப்படுகிறது. தேங்காய் நார் கயிறு தயாரித்தல், வெள்ளி கொலுசு மற்றும் பாத்திரங்கள் தயாரித்தல், ஜவுளி மற்றும் பட்டு நெசவு போன்ற தொழிகள் சேலம் மாவட்டத்தில் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது.

காணத்தக்க இடங்கள்:

1. முட்டல் இயற்கையின் மடி

2. சங்ககிரி கோட்டை

3. ஏற்காடு

4. மேட்டூர் ஆணை மற்றும் பூங்கா

5. சேலம் உயிரில் பூங்கா

கடலூர் மாவட்டம்:

இம்மாவட்டம் மாநிலத்தின் கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது, கடலூர் மாவட்டத்தின் அரண்களாக விழுப்புரம் நாகப்பட்டினம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் உள்ளன. கிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடல் அரணாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே பழுப்பு நிலக்கரி கிடைக்கும் மாவட்டமாக கடலூர் உள்ளது, தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு மற்றும் கொள்ளிடம் போன்ற ஆறுகள் கடலூர் மாவட்டத்தை செழுமையடையச் செய்கின்றன. இவ்வாறுகள் மழைக்காலங்களில் வெள்ளத்தால் நிரம்பியும் கோடைக்காலத்தில் மணலால் நிரம்பியும் காணப்படுகின்றன.

காணத்தக்க இடங்கள்:

• நடராஜர் கோயில்

• பிச்சாவரம்

• பாடலீஸ்வரர் கோவில்

• நெய்வேலி மின் நிலையம்

• பிச்சாவரம் பறவைகள் சரணாலயம்

• நெய்வேலி மின் நிலையம் 

விழுப்புரம் மாவட்டம்: 

கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக முன்பு விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பின்னர் கடலூரில் இருந்து பிளவுபட்டது மற்றும் செப்டம்பர் 30, 1993 அன்று ஒரு தனி மாவட்டமாக மாறியது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு கடலூர் மாவட்டத்தை ஒத்திருக்கிறது.

விழுப்புரம், இம்மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. இது செப்டம்பர் 30, 1993 ஆம் ஆண்டு முதல் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான விழுப்புரம், திருச்சிராப்பள்ளி – சென்னை தேசிய நெடுஞ்சாலை எண் 45ன் நடுவில் உள்ளது. இது இரயில் மற்றும் சாலையில் நன்கு இணைக்கப்பட்டுள்ளது மற்றும் விழுப்புரம் சந்திப்பு முக்கிய சந்திப்பாகும். இங்கிருந்து தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் எந்த இடத்திற்கும் செல்லலாம்.

காணதக்க இடங்கள்:

• செஞ்சி கோட்டை

• செஞ்சி மதிற்சுவர்

• புகழ்பெற்ற ரங்கநாதர் கோயில்

• திருவாமாத்தூர்

• எசாலம்

• 24 தீர்த்தங்கரர்கள்

• மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி

• சிங்கவரம்

• மரக்காணம் கடற்கரை

நாகப்பட்டினம் மாவட்டம்:

கடலோர கிழக்கு மாவட்டமான நாகப்பட்டினம் , தமிழ்நாடு கிழக்கு கடற்கரையில் வங்காள விரிகுடாவும் , சென்னைக்கு தெற்கே 326 கி.மீ., , திருச்சி இருந்து 145 கி.மீ, ஒரு நடுத்தர டவுன்.

காணத்தக்க இடங்கள்:

• நாகப்பட்டினம்

• பூம்புகார்

• நாகூர்

• வேளாங்கண்ணி

• தரங்கம்பாடி

• கோடியக்கரை

• திருக்கடையூர்

• சீர்காழி

• மயிலாடுதுறை

அரியலூர் மாவட்டம்:

அரியலூர் மாவட்டத்திற்கு தொன்மையான மற்றும் புகழ்வாய்ந்த வரலாறு ஒன்று உள்ளது. இதன் காலங்கள் 2 இலட்ச வருடங்களுக்கும் முன்னுள்ள வரலாற்றுக்கு முந்தைய நாகரீகத்திற்குக் கொண்டு செல்கிறது.

ஆழியின் கீழ் அரியலூர்:

மனித இனம் தோன்றுவதற்கு முன், இந்நிலம், கடலுக்கு அடியில் மூழ்கியிருந்தது. பின் காலநிலைமாற்றங்களால், கடல்நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெனிஸ் (gneiss) குடும்பத்தைச் சார்ந்த உருமாறிய பாறைகளால் ஆன தற்போதைய நிலம் வெளிப்பட்டது. இந்த பாறை வகைகள் வண்டல் மற்றும் ஜிப்சம் பாறைகளால் வெவ்வேறு புவியியல் காலகட்டங்களில் உருவானவை. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாற்றங்களின் காலத்தை புவியியலாளர்கள் ‘கிரிட்டாசியஸ்’ காலம் என குறிப்பிடுகின்றனர்.

காணத்தக்க இடங்கள்: 

• மேலப்பழுவூர் & கீழையூர்

• காமரசவல்லி

• செந்துறை, சென்னிவனம், 

• கங்கைகொண்டசோழபுரம், 

• வேட்டக்குடி- கரையவெட்டி 

• பறவைகள் சரணாலயம்

• கங்கைகொண்ட சோழபுரம்

முதலாம் இராஜராஜசோழன் ஆட்சியில் கட்டப்பட்ட கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள மிகப்பெரிய கங்கைகொண்டசோழீச்சரர் கோவில் , அரியலூர் பகுதியில் மிகச்சிறந்த ஒன்றாகும். கி.பி 1023 இல், கங்கை சமவெளியை வெற்றி கொண்ட பின்னர் முதலாம் இராஜேந்திர சோழனால், கங்கைகொண்டசோழபுரம் எனும் நகரமும் கங்கைகொண்டசோழீச்சரம் எனும் சிவன் கோவிலும் சோழ கங்கம் எனும் ஏரியும் வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம்:

தேதி 19.11.2007 இன்படி, அரசு பெரம்பலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மற்றும் அரியலூர் என இரு மாவட்டங்களாகப் பிரிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பெரம்பலூரை தலைமையாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம் உருவானது. இம்மாவட்டம் ஒரு வருவாய்க் கோட்டத்தினை உள்ளடக்கியது. இது பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய மூன்று வட்டங்களை (தாலுக்காக்கள்) கொண்டது. பின்னர் அரசாணை எண் 410, தேதி 21.11.2012 இன்படி குன்னம் வட்டம், குன்னம் மற்றும் ஆலத்தூர் வட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

சுற்றுலாத் தலங்கள்:

• ரஞ்சன் குடி கோட்டை

• சாத்தனூர் கல் மரம்

• அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்

• தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வலங்கைமான் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வட்டங்களையும் இணைத்து 01.01.1997 அன்று திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 573 ஊர்கள், 10 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள்கள் உள்ளன.

சுற்றுலாத் தலங்கள்:

• வடுவூர் பறவைகள் சரணாலயம்

• உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்

• முத்துப்பேட்டையில் சதுப்பு 

• நிலகாடுகள்

தஞ்சாவூர் மாவட்டம்:

தென் இந்தியாவின் நெற்களஞ்சியம்

தமிழா்களின் நீர் மேலாண்மையால் சோழ நாடு,நீர் நாடு,நீர்வள நாடு என அறியப்பட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மைய நாடியாக காவிரி ஆறு வேளாண்மைக்கு வளம் சேர்க்கிறது.

காணத்தக்க-இடங்கள்:

1.தஞ்சாவூா் அரண்மனை

2. கலைக்கூடம்

3. சரஸ்வதி மகால் நூலகம்

4. இராஜ இராஜன் மணிமண்டபம்

5. ஷ்வார்ட்ஸ் தேவாலயம்


திருச்சிராப்பள்ளி மாவட்டம்:

திருச்சிராப்பள்ளி காவேரி நதியின் கரையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் நான்காவது பெரிய நகரமாகும். ஆரம்ப சோழர்களின் கோட்டையாக இருந்தது, பின்னர் பல்லவர்களிடம் விழுந்தது. திருச்சி மலைக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுளள் கட்டிடங்கள் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையாகும். கோட்டையைத் தவிர 1760 முற்பட்ட பல திருக்கோவில்கள் உள்ளன. திருச்சியில் உள்ள நகரம் மற்றும் அதன் கோட்டை மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் பல கலைஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.


காணத்தக்க இடங்கள்:

• ஜம்புகேஸ்வர் திருக்கோவில், 

• திருவானைக்காவல்

• மாரியம்மன் கோவில், சமயபுரம்

• புனித மரியன்னை பேராலயம் ,

கரூர் மாவட்டம்:

கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர் வட்டம் 1910 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. கரூர் மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண்.683 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள்.25.07.1996 இன்படி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது

முக்கிய இடங்கள்:

• வெண்ணெய்மலை
• நெரூர்
• அரசு அருங்காட்சியகம்
• புகழிமலை
• அய்யர்மலை
• பொன்னணியார் அணை
• திருமுக்கூடலூர்
• மாயனூர் கதவணை
• திருக்காம்புலியூர் 

ஈரோடு மாவட்டம்:

ஈரோடு மாவட்டம் கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இம்மாவட்டத்தின் முன்வரலாறு கோயமுத்தூர் மாவட்டத்துடன் பின்னிப்பினைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு என தனியே வரலாற்றினை பிரித்துப் பரர்ப்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும். 

சுற்றுலாத் தலங்கள்:

• பவானிசாகா் அணை

• வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

• அரசு அருங்காட்சியகம், 

• வ.உ.சி.பூங்கா

நீலகிரி மாவட்டம்:

நீலகிரி மாவட்டம் உங்களை வரவேற்கிறது. உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பகுதியான நீலகிரி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கியமான சந்திப்புப் புள்ளியாகும். ”மலைகளின் அரசி” எனப்படும் உதகமண்டலம், குன்னூர் (உதகையி்ல் இருந்து 19 கி.மீ. தொலைவு) மற்றும் கோத்தகிரி (உதகையி்ல் இருந்து 31 கி.மீ) ஆகியவை நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களாகும்.

சுற்றுலாத் தலங்கள்:


1. தாவரவியல் பூங்கா

2. ரோஜாத் தோட்டம்.

3. உதகை ஏரி படகு இல்லம்

4. தொட்டபெட்டா

5. ஊட்டி ராஜ் பவன்

6. கிளன்மார்கன்

7. அவலாஞ்சி

8. பைக்காரா நதி மற்றும் நீர்வீழ்ச்சி

9. சிம்ஸ் பூங்கா

10. முதுமலை புலிகள் காப்பகம்

கோவை மாவட்டம்:

கோயம்புத்தூர் நகரம், தமிழ் நாடு மாநிலத்தில் மூன்றாவது பெரிய நகரம், தமிழ் நாட்டிலேயே ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம்,நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. கொங்கு நாடு, தென்னிந்தியாவோடு பிரிட்டிஷாரின் கைகளில் விழுந்த பொழுது இதன் பெயர் கோயம்புத்தூர் என மாற்றப்பட்டது. தற்பொழுதும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த ஊர் கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

சுற்றுலாத் தலங்கள்:

• வால்பாறை,

• கோவை குற்றாலம்,

• ஆழியார்,

• பரளிகாடு

திருப்பூர் மாவட்டம்:

திருப்பூர் புதிதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் தலை நகரமாக அமைந்துள்ளது. இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். . விடுதலைப்போரில் கொடி காத்த குமரன் பிறந்த மண் என்பதே ஆகும்.தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் .

அணைகள்:

• அமராவதி அணை

• திருமூா்த்தி அணை

• உப்பாறு அணை

• நல்லதங்காள் ஓடை அணை

• இந்திராகாந்தி வனவிலங்கு சரணாயலம்
• முதலைப் பண்ணை 

• அமராவதி சாகா்

திண்டுக்கல் மாவட்டம்:

திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டதிலிருந்து 15.9.1985 அன்று உருவானது. முதல் மாவட்ட கலெக்டர் திரு.எம்.மாதவன் நம்பியார், I.A.S. திண்டுக்கல் மாவட்டம் சில காலம் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன.

சுற்றுலாத் தலங்கள்:

• கொடைக்கானல்
• பழனி முருகன் கோவில்
• சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் 
• திண்டுக்கல்
• சிறுமலை

புதுக்கோட்டை மாவட்டம்:

தமிழகத்தின் சுதேச அரசுகளில் ஒன்றாக விளங்கிய புதுக்கோட்டை மாவட்டம், அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ஆதி மனிதர்கள் வசிப்பிடமாக திகழ்ந்த இம்மாவட்டத்தின் பல பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுற்றுலாத் தலங்கள்:

• சித்தன்னவாசல்

• திருமயம் கோட்டை

• விராலிமலை

• ஆவுடையார்கோயில்

• கொடும்பாலூ

• மலையடிப்பட்டி

• நார்த்தாமலை

• குடுமியான்மலை

ராமநாதபுரம் மாவட்டம்:

இராமநாதபுரம் 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை இணைத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப்.பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு என அழைக்கப்பட்டது. இந்தப்பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது..

காணத்தக்க இடங்கள்:

• அக்னி தீர்த்தம்

• பாம்பன் பாலம்

• தனுஸ்கோடி

• முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்

• தேவிப்பட்டினம் (நவபாஷாணம்)

• ஏர்வாடி

சிவகங்கை மாவட்டம்:

இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 15/03/1985 முதல் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மக்கள் தொகையில் 27 ஆவது மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. மேலும் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்ருக்கு 324 ஆக உள்ளது. 1000 ஆண்களுக்கு 1,003 பெண்கள் வசிக்கின்றனர். 

காணத்தக்க இடங்கள்:

• கானாடுகாத்தான்
• செட்டிநாடு அரண்மனை
• ஆத்தங்குடி
• ஆயிரம் ஜன்னல் வீடு
• கண்ணதாசன் நினைவகம்
• வேட்டங்குடி பறவைகள்     சரணாலயம்

கீழடி அகழ்வாராய்ச்சி:

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மதுரை மாவட்டம்:

தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.

சுற்றுலாத் தலங்கள்:


• அழகர் கோவில்

• தெப்பக்குளம் மீனாட்சி அம்மன் கோயிலில்

• காந்தி அருங்காட்சியகம்

• அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

• திருப்பரங்குன்றம் முருகன் 

தேனி மாவட்டம்:

தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ அமைந்த இயற்கை எழில்மிகு மாவட்டம் ஆகும். மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்தை புதிதாக பிரிப்பதற்கு ஆணையிடப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டு 01.01.1997 முதல் தேனி மாவட்டம் செயல்பட தொடங்கியது.

காணத்தக்க இடங்கள்:


• சின்னச்சுருளி

• கண்ணகி கோவில்

• வைகைஅணை

• பென்னிகுவிக் மணிமண்டபம்

• குச்சனூரான் கோவில்

• குரங்கனி

• சுருளி அருவி

• கும்பக்கரை அருவி

விருதுநகர் மாவட்டம்:

விருதுநகர் மாவட்டம், முந்தைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது. இம்மாவட்டம் தமிழ்நாட்டில் தென்பகுதியில் அமைந்துள்ளது. 

காணத்தக்க இடங்கள்:


• அய்யனார் அருவி, 

• இராஜபாளையம்
ஆண்டாள் கோயில், 

• ஸ்ரீவில்லிப்புத்தூர்
• சதுரகிரி மலை, 

• ஸ்ரீவில்லிப்புத்தூர்

திருநெல்வேலி மாவட்டம்:

1790-ல் கிழக்கு இந்தியா கம்பெனியால் திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டு பின் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801-ல் பிரிட்டிஷார் இந்த நகரை கையகப்படுத்தி “Tinnevelly’ மாவட்டம் என பெயரிட்டனர். முதலில் திருநெல்வேலி நகரை அடுத்து அமைந்துள்ள பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டுதான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது

காணத்தக்க இடங்கள்:

• குற்றாலம்

• பாபநாசம் நீர்வீழ்ச்சி / அகஸ்தியர் 

• நீர்வீழ்ச்சி

• மணிமுத்தாறு அணை

தூத்துக்குடி மாவட்டம்:

தூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.

20ம் நூண்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும்ஆங்கிலேயின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயிர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டியகட்டப்பொம்மன்,மகாகவிபாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள்

காணத்தக்க இடங்கள்:

• அய்யனார் சுணை

• எட்டையாபுரம்

• குலசேகரபட்டிணம்

• ஆதிச்சநல்லூர்

• காயல்பட்டிணம்

• கொற்கை பழைய துறைமுகம்

• மணப்பாடு

• திருச்செந்தூர் முருகன் கோவில்

கன்னியாகுமரி மாவட்டம்:

கன்னியாகுமரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக சிறிய மாவட்டமாகும். பரப்பளவில் மிகச்சிறிய (1672 சதுர கி.மீ) மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடா்த்தியில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறது. கல்வியறிவில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக விளங்குகிறது. இடவடிவமைப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி வேறுபட்டு நிற்கிறது. உலகத்தில் இங்கு மட்டுமே சூரியன் உதயத்தினையும், சூரியன் மறைவினையும் ஒரே இடத்தில் பார்க்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது.

சுற்றுலா இடங்கள்:


• சொத்தவிளை கடற்கரை

• மாத்தூா் தொட்டிப்பாலம

• திற்பரப்பு நீா்வீழ்ச்சி

• காமராஜா் நினைவு மண்டபம்,

• மகாத்மா காந்தி நினைவு மண்டபம்

• விவேகானந்தா் நினைவு மண்டபம்

• பத்மநாபபுரம் அரண்மனை


செங்கல்பட்டு மாவட்டம்:

செங்கல்பட்டு மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 37-வது மாவட்டமாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது.தமிழ்நாட்டின் 37-வது மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தின் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.இம்மாவட்டத்தின் தலைநகரம் செங்கல்பட்டு நகரம் ஆகும்.

சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்:


• திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்

• மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்

• திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்

• மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்

• மாமல்லபுரம்

• சாளுவன்குப்பம் புலிக்குடைவரை
தட்சிண சித்ரா